சிபிஐ விசாரணை கண்காணிப்பு குழுவினரிடம் புகார் மனு அளிக்க வந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களை, இரண்டாவது நாளாக 5 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததால் கோபமடைந்தவர்கள், சிபிஐ அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி, மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமித்சரண், சோனல்.வி.மிஸ்ரா குழுவினர் இரண்டு நாட்களாக சிபிஐ முகாம் அலுவலகத்தில், பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரிடம் புகார் மனு பெற்று வருகின்றனர்.நேற்று 18 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள், அமைப்பினர் புகார் மனு அளிக்க வந்த நிலையில், இரவு 7:00 மணி ஆனதால் இன்று காலை 10.30 மணிக்கு பிறகு மீண்டும் புகார் மனு கொடுங்கள் என அனுப்பி வைத்தனர்.

இன்று காலை 10.30 மணிக்கு வந்தவர்கள் 2.30 மணி வரை புகார் மனு பெறாமல் காத்திருக்க வைத்ததால் கோபமடைந்தவர்கள், சிபிஐ அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக காவல்துறையினர் அவர்களை அமர வைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைவரையும் உள்ளே அழைத்து புகார் மனுவை பெற்றனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.





