கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் இரைச்சல் பாறை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரன் திருக்கோவில் விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீ முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார பூஜையுடன் விழா தொடங்கியது அதைத் தொடர்ந்து இன்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது அதைத்தொடர்ந்து மதியம் உச்சிகால பூஜை நடைபெற்று அனைவருக்கும் அசைவ அன்னதானம் நடைபெற்றது இவ்விழா ஏற்பாடுகளை ரவி தலைமையில் பூசாரிகள் சத்தியமூர்த்தி, ரத்தினகுமார், வர்க்கீஸ் மற்றும் ஊர் பொதுமக்களும் இணைந்து செய்திருந்த நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக நகரச்செயலாளர் மயில் கணேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டி.லட்சுமணசிங், நகர துணைச்செயலாளர் எஸ்.பி.பொன்கணேசன், நகர வர்த்தக அணி செயலாளர் சண்முகவேல், நகர வார்டு செயலாளர் எம்.ஆர்.எஸ்.மோகன், கருமலை விமலா ஆகியோர்களுடன் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கருமலை இரைச்சல் பாறை ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் விழா!









