காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெருமந்தூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற சிலம்ப போட்டியில் சுமார் 200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு சிலம்பம் பேரவை தலைவர். ஜெ. ஈசன் தலைமையில் நடுவர் குழுவினர் போட்டியை சிறப்பாக நடத்தினர்.மாநில துணை பொது செயலாளர். சண்முகப்பிரியா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக அகில பாரத சிலம்பம் கவுன்சில் தலைவர். கலைமுது மணி. ஆர் முருககனி ஆசான் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகளான நாஞ்சில் சுரேஷ், சரவணன், நந்தகுமார், கஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பம் பேரவை தலைவர். ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்தனர். நடுவர் பணியில் சிறப்பாக ஈடுபட்ட அனைவரையும் மாநில தலைவர். ஈசன் பாராட்டினார். வெற்றி பெற்ற வீரர்கள் சிவகங்கை நடைபெறும் மாநில போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று மாநில பொதுச் செயலாளர். நாஞ்சில். மு. சுரேஷ் தெரிவித்தார்..
Leave a Reply