அண்ணாமலையுடன் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தாயார் சந்திப்பு- பாஜக துணை நிற்கும் என வாக்குறுதி..!

ள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினர்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவி, பள்ளியின் மாடியில் இருந்து குதித்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்தை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளி சூறையாடப்பட்டது. மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி, அவரது பெற்றோர்கள் சட்டப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்ட 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த மாணவியின் பெற்றோர், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குறுகிய காலத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்பிக்கப்படாமல் தண்டனை பெற்று தர வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். இதனை முதலமைச்சர்களும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், மாணவியின் பெற்றோர் சென்னை கமலாலயத்தில் நேற்று அண்ணாமலையை சந்தித்து பேசினர். அப்போது, ‘மாணவியின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க தேவையான அனைத்து சட்ட உதவிகளையும்செய்ய பா.ஜ.க, துணை நிற்கும் என அண்ணாமலை உறுதி அளித்தார்.