கே.என்.நேருவின் பணி நியமன ஊழல்… ED சொன்ன அதிர்ச்சி தகவல்..!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்து மோசடி செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும், 232 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் அமலாகத்துறை அனுப்பியிருந்தது.

தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட 232 பக்க விரிவான அறிக்கையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக உள்ள கே.என். நேரு, அவரது சகோதரர்கள் கே.என். மணிவண்ணன், ரவிச்சந்திரன் மற்றும் அவர்களுக்கு நெருங்கியவர்கள் டி. ரமேஷ், டி. செல்வமணி, கவிபிரசாத் ஆகியோர் 2,538 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை நியமிப்பதில் லஞ்ச அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

குறிப்பாக அமலாக்கத்துறை அக்டோபர் 27ஆம் தேதி அனுப்பிய அறிக்கையில், பணம் சலுகை தடுப்பு சட்டம் (PMLA) பிரிவு 66(2)ன் கீழ், தமிழக காவல்துறையிடம் விசாரணை தொடங்குமாறு கோரியுள்ளது. அமலாக்கத்துறையின் தகவலின்படி, சுமார் 150 பொறியாளர், இளநிலை பொறியாளர், நகரத் திட்ட அதிகாரி, சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை மோசடி செய்து நியமனம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்த நிலையில் நேற்று (அக். 29) அமைச்சர் கே.என். நேரு இந்த விவகாரம் தொடர்பாக மறுப்பு தெரிவித்து அது தொடர்பான விளக்க அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். குறிப்பாக நேருவின் உதவியாளர்கள் கவி பிரசாத் மற்றும் மணிவண்ணன் இருவரும் தங்களுக்கு சம்பந்தம் இல்லை என கூறி இருந்தனர். மேலும் ரமேஷ், ராமச்சந்திரன் செல்வமணி ஆகியோர் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வேலைக்கு விரும்பக்கூடிய விண்ணப்பதாரர்கள் அல்லது உறவினர்கள் முதலில் நேருவின் நெருங்கிய ஐந்து உதவியாளர்களான ரமேஷ்,செல்வமணி, கவி பிரசாத், மணிவண்ணன், ரவிச்சந்திரன் அணுகுவதாகவும் அமலாக்குத்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் எவ்வளவு லஞ்சம் வாங்கலாம் என்றும், ஒப்பந்தம் முடிந்த பின்னர் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை தரும் நபரை தேர்வு செய்வார்கள் எனவும் இதை நேரு முழுமையாக அறிந்திருக்கிறார் அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலாக்கத்துறையால் நடத்தப்பட்ட சோதனையில், நேருவின் உதவியாளர்களிடம் கைப்பற்றப்பட்ட கைப்பேசிகளில் உள்ள வாட்ஸ்அப் உரையாடல்கள் மீட்கப்பட்டதாகவும், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி வரை எம்எல்ஏக்கள், உயர் அதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளின் பரிந்துரைகளை ரமேஷ், செல்வமணி, கவிபிரசாத் பெற்றதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எழுத்துத் தேர்வை நடத்தி, 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி முடிவுகளை வெளியிட்டது. பின்னர் தகுதியானோருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இறுதி முடிவுகள் கடந்த ஜூலை 4ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் முடிவுகள் அறிவிக்கப்படும் முன், பிரமுகர்கள் அனுப்பிய விண்ணப்பங்கள், கலந்தாய்வு அழைப்பிதழ்கள் ஆகியவை உதவியாளர்களின் கைப்பேசிகளில் இருந்து மீட்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. முடிவுகள் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பே தேர்வானவர்களின் பெயர்கள் இவர்கள் இடையே பரிமாறப்பட்டதாகவும், ரமேஷின் கைப்பேசியில் ரவிச்சந்திரன், செல்வமணி உள்ளிட்டோரின் குறிப்புகளுடன் முக்கியத்துவம்/முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியல் கிடைத்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் நெருங்கிய உதவியாளராக அடையாளம் காணப்பட்ட செல்வமணி, கலந்தாய்வு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே பிரமுகர்களிடம் விண்ணப்பதாரர்களின் விவரங்களை பெற்றதாகவும், ஒரு பிரமுகருக்கு அவருக்கு நன்றி தெரிவித்து, மேலும் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சியில் நியமனம் செய்ய உதவுமாறு கேட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரவிச்சந்திரனுடன் 28 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றிய கவிபிரசாத், ஆரம்ப பட்டியலில் தேர்வாகாத ஒரு விண்ணப்பதாரரின் பெயரை இறுதி மதிப்பெண் பட்டியலில் சேர்த்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ரவிச்சந்திரன் தொழில் துறையில் இணை இயக்குநராக பணியாற்றும் ஒருவரின் மகளின் தேர்வை உறுதி செய்ததாகவும், ஹவாலா பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்தப்பட்ட 10 நோட்டின் புகைப்படங்களும் வாட்ஸ்அப் உரையாடல்களில் பகிரப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.