சென்னை: சீனாவின் கிழக்கு பகுதியான சேஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு, முறிந்த எலும்புகளை வெகுநீள யாத்திரையில்லாமல் மூன்று நிமிடத்திற்குள் இணைக்கக்கூடிய புதிய பசையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதன் பெயர் ‘போன்-02’ (bone zero 2) என்றும், அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பண்புகள் ஆய்வக சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்,
மனிதனுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலும், விபத்து போன்றவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது எலும்புகள் தான். எலும்பு முறிவு ஏற்பட்டால் அதன் தீவிரத்தை பொறுத்து 2 முதல் 1 வருடம் வரை கூட முடங்க வேண்டியது தான்.
அதே நேரத்தில், எலும்பு முறிவைப் பொறுத்து சிகிச்சைகளும் மாறுபடும். தற்போது எலும்பு முறிவுகள் சார்ந்த சிகிச்சைக்கு தற்போது அறுவை சிகிச்சை, உலோக பிளேட்டுகள் (metal implants) போன்ற முறைகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இத்தகைய உலோகம் சிலரின் உடலில் நிரந்தரமாகவே இருக்கும் நிலையும் காணப்படுகிறது; அதனால் இரண்டாவது அறுவை சிகிச்சையைக் குறைக்க புதிய வாய்ப்புகள் வேண்டும் என்று மருத்துவக் குழுக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சீனாவின் கிழக்கு பகுதியான சேஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு, முறிந்த எலும்புகளை வெகுநீள யாத்திரையில்லாமல் மூன்று நிமிடத்திற்குள் இணைக்கக் கூடிய புதிய பசையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் பெயர் ‘போன்-02’ என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த பசையை உடைந்த எலும்புகளுக்கிடையே வைத்தால் உடனே ஒட்டிக் கொள்ளும் எனவும், அதே நேரத்தில் மனித உடலுக்கு எந்த ஒவ்வாமையும் ஏற்படுத்தாமல் மனித உடல் அதனை உள்வாங்கிக்கொள்ளும் என்பதால், எலும்பு முறிவு சரியானதும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டிய அவசியமில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். போன்-02 உருவாக்கம் குறித்து எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் லின் சியான்ஃபெங் (Lin Xianfeng) கூறுகையில், “சிப்பிகள் நீரில் குறிப்பிட்ட இடங்களில் தாங்கும் இயல்பைக் கவனித்ததில் இந்த யோசனை தோன்றியது. போன்-02 மூலம் உடைந்த எலும்புகளை மூன்று நிமிடத்தில் ஒட்ட முடியும். மேலும் எலும்பு குணம்பெற்ற பின் இந்த பசை தானாகவே கரைந்து விடும்” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பசையை சோதனை செய்வவதற்காக சுமார் 150 பேருக்கு வைத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிவியல் ஆய்வு செய்ததில், பாதுகாப்பு, செயல்திறன் பரிசோதனைகள் முடிக்கப்பட்டதகவும், ஆய்வில் எந்தவொரு பிரச்சனையும், இல்லை என அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. என்றாலும் நீண்டகாலத் தரவுகள் மற்றும் பெரிய அளவிலான மருத்துவப் பரிசோதனைகள் தேவைப்படுவதாக மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
போன்-02 உலகளவில் அறிமுகமானால் எலும்பு முறிவு சிகிச்சையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உலோகம் பொருத்தும் அறுவைச் சிகிச்சை குறைக்கப்படுவதால் நான்கு முக்கிய நன்மைகள் ஏற்படும். சிகிச்சை சீராகும் நேரம் குறைவு, இரண்டாவது அறுவைத் தேவையில்லை பாதிப்பு மற்றும் இடையே ஏற்படும் சிக்கல்கள் குறைவு என்பதோடு, நோயாளியின் விரைவாக குணமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதை வணிகமயமாக்குவதற்கு முன்னர், விரிவான மருத்துவ பரிசோதனைகள், சர்வதேச தரநிலைகள் பூர்த்தி செய்ய மருத்துவ அனுமதிகள் அவசியம் என்பதோடு, நோயாளிகளின் வெவ்வேறு வயது, எலும்பு வகை மற்றும் உடல் நல நிலைகளைப் பொருத்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தலாக உள்ளது. இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகிற்கு மாற்றத்தை கொண்டு வருமா என்பது அடுத்த கட்ட பரிசோதனைகளிலும், நீண்டகால தரவுகளிலும் தெளிவாகும் எனவும் கூறுகின்றனர்.