அமித்ஷாவுடன் ஜூனியர் என்.டி.ஆர். நேரில் சந்திப்பு- அரசியல் களத்தில் குத்திக்கிறாரா..?

ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து உரையாடியது தெலங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்கோபால் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஐதராபாத்தில் ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசினார்.

இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். 20 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும் ஜூனியர் என்டிஆர் தெலங்கு சினிமாவின் ரத்தினம் என்றும் அமித்ஷா பாராட்டியுள்ளார். முன்னதாக ராஜமவுலி பிலிம் சிட்டிக்கு சென்ற அமித்ஷா அதன் நிறுவனர் ராஜமவுலி ராவை சந்தித்தார்.

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்த்து வரும் நிலையில் அமித்ஷா ஜூனியர் என்டிஆரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் அரசியலில் இறங்கலாம் என்றும் தகவல்கள் உலவுகின்றன.