பூட்டிய வீட்டில் நகை திருட்டு..!

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, வேணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் ( வயது 38) இவர்கடந்த 4-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருந்தார். நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ராஜேஷ் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.