கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோடு,சேரன் மாநகரை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி மல்லிகா ( வயது 63) இவர் கடந்த 26, ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார் நேற்று அவரது வீட்டின் முன்கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் பார்த்து மல்லிகாவுக்கு தகவல் கொடுத்தார் .அவர் நேற்று வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 32 கிராம் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து மல்லிகா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை கொள்ளை..!









