கோவை மாநகராட்சி ஊழியர் வீட்டில் நகை – பணம் கொள்ளை.

கோவை ஜூன் 2 கோவை பேரூர் பச்சாபாளையம் ,ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் தமிழரசு.இவரது மனைவி நிவேதா.தமிழரசு கடந்த 25-ஆம் தேதி தஞ்சாவூருக்கு சென்றார். மறுநாள் அவரது மனைவி நிவேதாவும் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.தமிழரசு தஞ்சாவூரில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க நகை ,200 கிராம் வெள்ளி பொருட்கள் பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது .இது குறித்து பேரூர் போலீசில் தமிழரசு புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.