கோவை மே 7
கோடநாடு – கொலை கொள்ளை வழக்கு விசாரணை கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது .இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகும்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்ததது இதைத் தொடர்ந்து பூங்குன்றன் நேற்று காலை 11 மணிக்கு கோவைகாந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் போலீசார் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தினர் . கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்ற போது என்னென்ன பொருட்கள் கோடநாடு பங்களாவில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டது?இதற்கு உடந்தையாக யாரும் இருந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது .அவர் தெரிவித்த விவரங்கள் எழுத்து மூலமாகவும் வீடியோ மூலமாகவும் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே கொலை – கொள்ளை வழக்கைவிசாரித்த தனிப்படை போலீசார் பூங்குன்றனிடம் விசாரணை மேற்கொண்டு இருந்த நிலையில் தற்போது சி. பி. சி ஐ.டி போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5 மணி வரை நடந்தது கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 300 க்கு மேற்பட்டோருடன் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.