ஜூலை 21 ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய அன்று, எதிர்பாராத விதமாக குடியரசு துணைத்தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார்.
தனது உடல்நிலை காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அவர் தெரிவித்திருந்தாலும், இதற்குப் பின்னால் அரசியல் அழுத்தம் இருக்கலாம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், “ஜெகதீப் தன்கர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்று பரபரப்பான குற்றச்சாட்டை வெளியிட்டார். அவர் கூறுகையில், “தன்கரின் இல்லத்தை சுற்றி ராணுவத்தினர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யவைக்கப்பட்டுள்ளார். ஏன், எதற்காக அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டிய தேவையென்று எங்களுக்குப் புரியவில்லை” என்றார்.
முன்னாள் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரின் தற்போதைய நிலைமை, அவரது உடல்நிலை குறித்த தகவல், மற்றும் அவர் வழங்கிய ராஜினாமா உண்மையிலேயே விருப்பப்படியா? அல்லது அழுத்தத்தாலா? என்பதைப் பற்றி தற்போது அரசியல் மையங்களில் கடும் சர்ச்சை உருவாகியுள்ளது.