கோவை சிங்காநல்லூர் வ. உ. சி வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சுபி ( வயது 23) கணினி இன்ஜினியர் .இவர் பெங்களூரை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் . அவர் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வந்தார். இதற்காக அவருக்கு வீட்டில் மாடியில் தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது நேற்று சுபியின் தந்தை அவரை சாப்பிட அழைத்தார் . ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் மாடிக்கு சென்று பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை. அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது சுபி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சுபி ஒரு வாலிபரை உயிருக்கு உயிராக காதலித்து வந்தாராம். அந்த காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதல் தோல்வி அடைந்து விடுமோ ? என்ற அச்சத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுபி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது..
ஐ.டி.பெண் ஊழியர் தற்கொலை.
