போர் கார், பீரங்கி, கப்பல், விமானம் மாதிரி… போர் ரயிலை பயன்படுத்தும் இந்திய ராணுவம்.!!

பாகிஸ்தான் பயரங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் உள்ளே நுழைந்து பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியது.

இதனால் இரு நாட்டிற்கும் இடையே போர் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இரு நாடுகளும் தற்போது ராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ராணுவ ரயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை பார்ப்போம்.

பொதுவாக ராணுவத்திற்கான தரை வழி வாகனம், விமானங்கள், கப்பல்கள் போன்ற வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவது நமக்கு தெரியும். ஆனால் ராணுவத்திற்கான ரயிலும் பயன்பாட்டில் உள்ளது. இது பலருக்கு தெரியாமல் இருக்கிறது. மற்ற வாகனங்கள் தாக்குதல் நடத்த உதவும், ராணுவ ரயில் எதற்காக பயன்படும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.

ரயில் போர் விமானங்கள், போர் கப்பல்கள் போல நேரடியாக எதிரிகளை தாக்க பயன்படுத்த முடியாது. ஆனால் ராணுவ தளவாடங்களை விரைவாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகிறது. மற்ற ரயிலுக்கும் இந்த ரயிலுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கிறது.

ராணுவ ரயில் ஒரு ரூட்டில் பயணிக்கிறது என்றால் அந்த ரூட்டில் அந்த நேரத்தில் இயங்க வேண்டிய மற்ற ரயில்கள் எல்லாம் இந்த போர் நேரத்தில் கேன்சல் செய்யப்படும். குறிப்பிட்ட ரயில் செல்லும் பாதை மற்ற பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் எதுவுமே இல்லாத வகையில் பார்த்துக்கொள்வார்கள். இதனால் ராணுவ ரயில் எங்கிருந்து எங்கு பயணம் செய்கிறது என்ற தகவல் ரகசியம் காக்கப்படும்.

இந்த ரயில்களில் ராணுவ தளவாடங்கள் பீரங்கள், ஆயுதங்கள், வெடி மருந்துகள், குண்டுகள் உள்ளிட்ட மிக முக்கியமான பொருட்கள் எல்லாம் கொண்டு செல்லப்படும். தரை வழியாக சென்றால் அதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது இருக்கும். அதே நேரம் அதிக நேரம் செலவாகும். ரயில் மூலம் கொண்டு சென்றால் விரைவாக கொண்டு செல்ல முடியும். ஏற்கனவே உள்ள ரயில்வே கட்டமைப்பில் அடிப்படை பாதுகாப்பு எல்லாம் இருப்பதால் பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படாது.

இந்நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்புகள் தற்போது இந்தியாவில் ராணுவ ரயில்களின் ஓட்டத்தை கண்காணிக்கும் என இந்திய உளவுதுறை எச்சிரித்துள்ளதால் தற்போது இந்திய ராணுவ ரயில்கள் மிக பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் இயக்கப்படுகிறது. இந்திய ராணுவ ரயில்கள் குறித்த இயக்கம் வெளி உலகிற்கு வெளிப்படையாக தெரிந்தால் அந்த ரயில் மீதுதாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கும்.

அதன் காரணமாக தற்போது ரயில்வே நிர்வாகத்திற்கு ராணுவ ரயில் இயக்கம் குறித்த தகவல்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் எனவும். மிக முக்கியமான முடிவுகள் எல்லாம் விதிப்படி நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியா தற்போது தங்கள் ஆயுதங்களை எந்த பக்கம் அதிகம் கொண்டு செல்கிறது என்பதையும் பாகிஸ்தான் கண்காணிக்கும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் தற்போது போர் சூழலில் இருக்கிறது. இதனால் இந்திய ராணுவ நடவடிக்கைகள் ரகசியம் காக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்தில் கார், பீரங்கி, கப்பல், விமானம் போன்ற வாகனம் இருப்பது பலருக்கும் தெரியும். அதே நேரம் ராணுவ ரயிலும் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பிடத்தக்கது.