ஜம்மு – காஷ்மீரில் கடந்த 48 மணி நேரத்தில் நடந்த தேடுதல் வேட்டையில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இந்திய ராணுவம் இந்த தேடுதல் வேட்டையில் இறஙியது. இதில், 6 தீவிரவாதிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
கோலார், தெலார் பகுதிகளில் இச்சம்பவம் நடந்ததாகவும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன், கடந்த காலங்களில் நடந்த 2 முக்கிய தாக்குதல்களில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 12 ஆம் தேதி, கேலாரில் உள்ள உயரமான பகுதிகளில் ஒரு பயங்கரவாதக் குழு இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. மே 13 ஆம் தேதி காலை, சில நடமாட்டங்களைக் கண்டறிந்ததும், எங்கள் தரப்பினர் பயங்கரவாதிகளை எதிர்கொண்டனர், அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். அப்போது ராணுவம் அவர்களை செயலிழக்கச் செய்தனர்.
2-வது நடவடிக்கை டிரால் பகுதியில் ஒரு எல்லைக் கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த கிராமத்தில் நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் வெவ்வேறு வீடுகளில் நிலைநிறுத்தி எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான். இந்த நேரத்தில், நாங்கள் எதிர்கொண்ட சவால் பொதுமக்களை மீட்பதாகும். இதன் பிறகு, 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்” மேஜர் ஜெனரல் ஜோஷி கூறினார்.