இந்தியாவில் 4 இடங்களில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்
இந்தியாவில் நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
புதிய இடங்களில் சுமார் 10 முதல் 20 மெட்ரிக் டன் வரை தங்கம் இருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடக்க நிலை மதிப்பீடு மட்டுமே எனவும், தங்கத்தின் சரியான அளவை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதத்தில் ஒடிசா சட்டப்பேரவையில் உரையாற்றிய மாநில சுரங்கத்துறை அமைச்சர், மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கம் இருப்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது அந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், விரைவில் தங்கச் சுரங்கம் தோண்டுவதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இந்தியா சுமார் 700 முதல் 800 மெட்ரிக் டன் வரை தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. ஆனால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு வெறும் 1.6 டன் மட்டுமே. இந்நிலையில், ஒடிசாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கங்கள் பயன்பாட்டிற்கு வந்தால், உள்நாட்டு தங்க உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், தங்க இறக்குமதி அளவும் குறிப்பிடத்தக்க அளவில் குறையக்கூடும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து, வெளிநாட்டு இறக்குமதி குறைந்தால் தங்கத்தின் விலை குறையும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே, ஒடிசாவின் தியோகர் பகுதியில் தங்கச் சுரங்கம் அமைப்பதற்கான முதல் கட்ட ஏலத்தை நடத்தும் பணிகளை மாநில அரசு வேகமாக முன்னெடுத்து வருகிறது.