உலகின் பாதையை தீர்மானிப்பதில் முக்​கிய பங்கு இந்தியாவுக்கு உண்டு

புதுடெல்லி: தனி​யார் தொலைக்​காட்சி சார்​பில் நெக்​ஸ்ட் என்ற பெயரில் டெல்​லி​யில் நேற்று 3 நாள் மாநாடு தொடங்​கியது. இதில் 40 நாடு​களை சேர்ந்த தலை​வர்​கள் பங்​கேற்று உள்​ளனர். இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்கி வைத்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: உலக விநி​யோக சங்​கிலி மீண்​டும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த நேரத்​தில் ஐ.நா. சபை உள்​ளிட்ட சர்வ​தேச அமைப்​பு​களின் பங்கு கேள்விக்​குறி​யாகி உள்​ளது. இந்த இக்​கட்​டான சூழலிலும் இந்​தியா தொடர்ந்து முன்​னேறி செல்கிறது. உலகின் வளர்ச்​சிக்கு நாங்​கள் அளப்​பரிய பங்களிப்பை வழங்கி வரு​கிறோம். இதன் ​காரண​மாக உலகம் முழு​வதும் இந்தியா குறித்த எதிர்​பார்ப்பு மேலோங்கி வரு​கிறது.

பின்​லாந்து பிரதமர் அலெக்​சாண்​டர் அண்​மை​யில் டெல்​லிக்கு வருகை தந்​தார். அவர் கூறும்​போது, “உல​கம் செல்ல வேண்​டிய பாதையை தற்​போது குளோபல் சவுத் கூட்​டமைப்பு தீர்மானிக்கிறது” என்று தெரி​வித்​தார். குளோபல் சவுத் கூட்டமைப்​பின் முக்​கிய உறுப்பு நாடாக இந்​தியா விளங்​கு​கிறது. இதன்​படி உலகின் பாதையை தீர்​மானிப்​ப​தில் நாங்​கள் முக்​கிய பங்கு வகிப்​போம். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்​.