இந்த 10 வருடங்களில் நீங்கள் பார்த்தது வெறும் ட்ரெய்லரை மட்டுமே – பிரதமர் மோடி.!!

இந்த 10 வருடங்களில் நீங்கள் பார்த்தது ட்ரெய்லரை மட்டுமே என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு உத்தரபிரதேசத்தின் மீரட்டில் இருந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

அப்போது பேரணியில் உரையாற்றிய மோடி, ‘ இந்தியா’ கூட்டணி ஊழல் செய்வதாகவும், ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் குற்றம்சாட்டிய அவர், ‘எவ்வளவு பெரிய ஊழல்வாதியாக இருந்தாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் திருப்பித் தர வேண்டும், இது மோடியின் உத்தரவாதம்’ என்றார்.

‘எங்கள் அரசும் மூன்றாவது முறை ஆட்சிக்கு தயாராகி வருகிறது. புதிய அரசு அமைந்த பிறகு, முதல் 100 நாட்களில் என்ன முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்த பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ‘நண்பர்களே, கடந்த 10 ஆண்டுகளில் ஊழலுக்கு எதிராக எவ்வளவு பெரிய போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்பதை நாடு பார்த்தது. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறேன். இது சிலரை பதற்றமடைய செய்துள்ளது.

தமிழ்நாட்டின் கடற்கரையோரம் உள்ள கச்சத்தீவு தேசிய பாதுகாப்பின் பார்வையில் மிகவும் முக்கியமானது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்த தீவு நமக்கு இருந்தது. இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. ஆனால் 4-5 தசாப்தங்களுக்கு முன்பு, இந்த தீவு துண்டிக்கப்பட்டது என்று காங்கிரஸ் கூறியது. அன்னை இந்தியாவின் ஒரு பகுதியைத் துண்டித்து, அது இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது.

மீரட்டுடன் எனக்கு சிறப்பான உறவு உள்ளது. 2014 மற்றும் 2019 தேர்தல்களுக்கான எனது தேர்தல் பிரச்சாரத்தை மீரட்டில் இருந்து தொடங்கினேன். இப்போது 2024 தேர்தலுக்கான முதல் பேரணியும் மீரட்டில் நடைபெறுகிறது. 2024 மக்களவைத் தேர்தல் ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அல்ல, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான தேர்தல்.

இந்த 10 வருடங்களில் நீங்கள் பார்த்தது ட்ரெய்லரை மட்டுமே. இந்த மக்களவைத் தேர்தல் இரு குழுக்களுக்கு இடையேயான போட்டி. ஒரு பக்கம் ஊழலுக்கு எதிராக செயல்படும் குழுக்கள் மற்றொரு பக்கம் ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைக்கும் குழுக்கள். இந்தியா கூட்டணியை உருவாக்கினால், அது மோடியை பயமுறுத்தும் என்று நினைக்கிறார்கள். எனது நாடு எனது குடும்பம் என, ஊழலுக்கு எதிராக போராடி வருகிறேன். அதனால்தான் பல ஊழல்வாதிகள் இப்போது சிறையில் உள்ளனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்தும் ஜாமீன் கிடைக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் சிறு முதலீட்டாளர்கள், வங்கிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடாக பறிமுதல் செய்யப்பட்டது. ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து, 17,000 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை யாரிடம் தவறாகப் பெற்றதோ, அவர்களுக்கு திருப்பி அளித்துள்ளோம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது சாத்தியமற்றது என்று பலர் கருதினர். இருப்பினும், இப்போது கோவில் கட்டப்பட்டுள்ளது. இது தவிர, நமது இஸ்லாமிய சகோதரிகளுக்காக முத்தலாக் சட்டத்தையும் கொண்டு வந்தோம்’. இவ்வறு அவர் பேசினார்.