தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என்ற வாசகத்துடன. பிரதமர் மோடி செஸ் விளையாடுவது போல கோவை நகரின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க”வினர் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல்
கோவை நகரில் அடிக்கடி திமுக அதிமுக இடையே போஸ்டர் யுத்தம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதிதாக போஸ்டர் ஓட்டும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 44 வது எஸ்.எஸ் ஒலிம்பியாட் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் – கிக்கானிக் பள்ளி அருகில் உள்ள இரயில்நிலைய மேம்பாலத்தின் அருகில் –
பிரதமர் மோடி செஸ் விளையாடும் புகைப்படம் அதில் தமிழகத்தில் சதுரங்க ஆட்டம் துவங்கி உள்ளதாகவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது