கோவையில் காந்தி ஜெயந்தி, மீலாது நபிக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை- கலெக்டர் சமீரன் அறிவிப்பு..!

கோவையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள், மதுபானக்கூடங்களை அடைக்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம், இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவற்றை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, அக்டோபர் 9-ம் தேதி மீலாது நபி பண்டிகையை முன்னிட்டும் இந்த கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி இந்த 2 தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தபட்டவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.