ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளை அளிப்பதில் கமலா ஹாரிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம் கண்டுள்ள கமலா ஹாரிஸ், காஸா போர் தொடர்பில் பதிவு செய்துள்ள முதல் அழுத்தமான கருத்து இதுவென்றே கூறப்படுகிறது.
ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பின்னர், முதன்முறையாக முன்னெடுத்த ஒரு பேரணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மிச்சிகனில் உள்ள டெட்ராய்டில் நடந்த பேரணிக்குப் பிறகு ஹாரிஸ் போரை எதிர்க்கும் குழுக்களையும் சந்தித்தார். இதில் கலந்துகொண்ட சிலர் தெரிவிக்கையில், இஸ்ரேலுக்கு ஆயுத உதவி வழங்குவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே கமலா ஹாரிஸின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான பில் கார்டன் தமது சமூக ஊடக பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதில் கமலா ஹாரிஸுக்கு உடன்பாடில்லை.
மேலும், இஸ்ரேலால் தனித்து தமது மக்களை பாதுகாக்க முடியும் என்பதுடன் ஈரானையும் ஈரான் ஆதரவு குழுக்களையும் எதிர்கொள்ள முடியும் என கமலா ஹாரிஸ் நம்புவதாக பதிவு செய்துள்ளார்.
ஆனால் ஜனநாயகக் கட்சியில் உள்ள இடதுசாரிகளால் இஸ்ரேல் தொடர்பில் கமலா ஹாரிஸ் கடும் அழுத்தத்தை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு ஆயுத உதவி மற்றும் அரசியல் ஆதரவு அளிக்கும் ஜோ பைடனின் போக்கை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும், பாலஸ்தீன ஆதரவு நிலையை முன்னெடுத்தால் மட்டுமே போட்டி வலுவாக உள்ள மிச்சிகன் மாகாணத்தில் சாதிக்க முடியும். இங்கு போரை எதிர்க்கும் அரேபிய அமெரிக்க மக்கள் அதிகமாக உள்ளனர்.
மட்டுமின்றி, காஸா ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் புதன்கிழமை டெட்ராய்டில் நடந்த பேரணியும் பலமுறை பாதிக்கப்பட்டது.
அத்துடன், இஸ்ரேல் பிரதமரை நேரில் சந்தித்தபோதும், காஸா விவகாரத்தில் வெறும் பார்வையாளராக, அமைதியாக தம்மால் இருக்க முடியாது என அழுத்தமாக கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply