தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய புதிய அரசு அமைவதில் நீடித்த அரசியல் பரபரப்புகள், திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் விசிக-வின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முக்கிய கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, திமுக – அதிமுக கூட்டணி நடந்ததாக பல்வேறு தரப்பில் இருந்து கூறப்பட்டு வரும் நிலையில், திருமாவளவன் அதனை வெளிப்படையாக பேசி பெரும் புயலை கிளப்பியுள்ளார். அதோடு, தவெகவுக்கு ஆதரவு அளித்த பின்பும், தனக்கு வந்த போன் கால் குறித்தும், ஆட்சி அமைப்பது குறித்து நடந்த ஆலோசனை குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு புதிய அரசு அமைய திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக, ஐயூஎம்எல் ஆகியோரின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவைப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆளுநர் தலையிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, மீண்டும் ஒரு தேர்தல் வரக்கூடாது என்பதற்காகவே நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுத்தோம். ஆனால், இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி என்ற முறையில், எங்களை ஒருங்கிணைத்து ஒருமித்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களை ஆலோசிக்காமல், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு நேரடியாகத் தவெகவுடன் கூட்டணியாகவே இணைந்துவிட்டனர். இது சற்றே ஏமாற்றமளித்தது என்றார்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவும், என்னை துணை முதலமைச்சராகவும் முன்னிறுத்தி ஒரு கருத்து வெளியானது. குறிப்பாக, மே 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது குறித்துப் பேசிய திருமாவளவன், திரைமறைவில் நடந்த ஒரு பெரிய அரசியல் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். “மே 7ஆம் தேதி எண்ணை முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசினார். அப்போது, ‘நமது அணியும், அதிமுக அணியும் இணைந்தால் நாம் ஆட்சி அமைக்க முடியும். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக முன்மொழியலாம் என்ற ஒரு பிரப்போசல் வந்துள்ளது, இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான், ‘இது திமுகவின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும், இது நல்ல முயற்சி அல்ல’ என்று உடனடியாக மறுத்துவிட்டேன். இடதுசாரிகளும் இதே டோனில்தான் மறுத்தனர். இதன் தொடர்ச்சியாக மே 8-ஆம் தேதி இரவு ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. ‘அதிமுக மற்றும் சில தரப்பிலிருந்து உங்களைப் பொது வேட்பாளராக முன்மொழிந்துள்ளனர். நீங்கள் சம்மதித்தால் நீங்களே முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி மற்றும் இருவர் துணை முதலமைச்சர் என்ற ரீதியில் சீரியஸான ஒரு மூவ் நடக்கிறது’ என்று என்னிடம் கூறப்பட்டது. நான் அதைச் சிரித்துக்கொண்டே ‘தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்கிற கதையா?’ என்று மிகவும் ஃபன்னியாக எடுத்துக் கொண்டு மறுத்துவிட்டேன். என்றார். தொடர்ந்து, மே 9-ஆம் தேதி மதியம் நான் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் கடிதத்தைத் தயாரித்து, ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கிவிட்டு அலுவலகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது மாலை 4.45 மணி அளவில் மிக முக்கியமான மற்றும் நம்பிக்கையான ஒரு சோர்ஸிலிருந்து எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. நீங்கள் ஆதரவுக் கடிதம் கொடுத்தாலும் சரி, கொடுக்காவிட்டாலும் சரி.. நீங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என்று அறிவிக்கப் போகிறோம். தயவுசெய்து நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டாம், கொஞ்சம் காத்திருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் கன்வின்ஸ் ஆகி, எனது பெயரை முதலமைச்சர் பதவிக்குப் பிரப்போஸ் செய்துவிட்டதாகத் தகவல் கூறினர். ஆனால், நான் கைகூப்பிக் மன்னிப்புக் கேட்டுவிட்டு, எங்களது ஆதரவு நிலைப்பாட்டைச் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.







