நீண்ட நேரம் செல்போன் பேசியதை கணவர் கண்டித்ததால்… 3 வயது குழந்தையுடன் மனைவி திடீர் மாயம்..!

கோவை துடியலூர் அருகே உள்ள ராக்கிபாளையம் ஏ. கே. எஸ் .நகரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 28) இவரது மனைவி சுகன்யா (வயது 25) இவர் துடியலூரில் உள்ள டி- மார்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் .இவர் ஒருவருடன் செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். இதை அவரது கணவர் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா நேற்று முன்தினம் தனது 3 வயது மகனுடன் எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச், ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கணவர் அறிவழகன் துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..