வீடு புகுந்து நகை திருட்டு..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் ஷேக் ஜாவித் (வயது37) இவர்கடந்த 14-ம் தேதிவீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகப்பட்டினம் சென்றுள்ளார். இந்நிலையில் 16 -ந் தேதி வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த தங்க நகைகள், வெள்ளி கொலுசு மற்றும் 1 லேப்டாப் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன உத்தரவின் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தீவிர புலன் விசாரணையில் கோவை பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவப்பிரகாஷ் (வயது37) ராஜேந்திரன் மகன் ஹரிகுமார் (வயது22) மற்றும் மோகன் ராஜ் மகன் சந்திரபாபு (வயது35)ஆகியோர் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் மேற்படி நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி வழக்கில் திருட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.கொள்ளையர்களை கைதுசெய்துநகைகளை மீட்ட தனிப்படையினரை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பாராட்டினார்.