கோவை துடியலூர் , பன்னிமடை மேஸ்கோ கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 31) இவர் காந்திபுரம் ராஜாஜி வீதியில் ஆட்டோ மொபைல்ஸ் கடை நடத்தி வருகிறார் .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அன்னூரில் உள்ள சூரிய தேவ் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளார். இதற்கிடையே சீட்டின் தவணை முடிந்ததும் ரூ 9 லட்சத்து 45 ஆயிரத்தை சிட்பண்ட்ஸ் நிறுவன உரிமையாளரான அன்னூர் தென்னம்பாளையம் சாலை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற குட்டி ராஜேந்திரன் என்பவரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் சிறிது கால அவகாசம் கேட்டாரா ம் .ஆனால் அவர் கூறியபடி பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். சம்பவத்தன்று மாரிமுத்து சீட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று குட்டி ராஜேந்திரனிடம் பணம் கேட்டார் ஆனால் அவர் அந்த பணத்தை கொடுக்காமல் மாரிமுத்துவை மிரட்டினாராம் இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மாரிமுத்து இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார் .இதன் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குட்டி ராஜேந்திரனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் இந்து முன்னணியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளராகவும், இந்து மக்கள் கட்சியில் மாநில நிர்வாகியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது..!
