ஹிந்து பாரத் சேனா 28-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி எழுச்சி விழா – வீடியோ இணைப்பு.!!

ஹிந்து பாரத் சேனா 28 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி மற்றும் மக்கள் எழுச்சி விழா பொதுக்கூட்டம்
திருப்பூர் நடராஜ் தியேட்டர் சாலை ஆலங்காடு பகுதியில் மிக எழுச்சியோடு நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் தம்பு ஜி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக இந்து பாரத் சேனா நிறுவனத் தலைவர் கி.வீரா ராஜாஜி அகில இந்திய அகமுடையார் மகாசபை நிறுவனர் பொன் கரு ரஜினிகாந்த் இன்று அதிரடிப்படை நிறுவனர் ராஜகுரு ஜி. பாரத மாதா இந்து மக்கள் இயக்கம் நிறுவனர் சாய் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இந்துக்கள் விழா பற்றியும் இந்த மதத்தை பற்றியும் பொதுக்கூட்டத்தில் எழுச்சி உரையாற்றினார்கள்.

மேலும் இந்த விழாவில் மாநில இளைஞரணி செயலாளர் பிரண்ட்ஸ் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சதீஷ் மாநில மகளிர் அணி தலைவர் சரஸ்வதி, மாநில செய்தி தொடர்பாளர் லோகநாதன்,திருப்பூர் மாவட்ட பொதுச் செயலாளர் குமார், மாவட்ட செயலாளர் நாகராஜ், மாவட்ட துணைத் தலைவர் பாலு, மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி‌ மாநகர் மாவட்ட தலைவர் உள்ளிட்ட மாநிலம் மாவட்ட நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் பெருந்திரளாக பங்கேற்றனர்…