சிங்கப்பூரிலிருந்து கோவை விமான நிலையம் வந்த பயணியிடமிருந்து ரூ.5 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சா போதைப் பொருள்கள் பறிமுதல்

கோவை ஜூன் 22சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் போதை பொருள் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் கோவை விமான நிலையம் வந்த சிங்கப்பூர் பயணிகளிடம் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பயணி ஒருவரின் பையை சோதனையிட்டபோது அதில் உயர்ரக கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்அவரது பெயர் முகமது பைசல் என்பது தெரியவந்தது. இவர் கேரளாவைச் சேர்ந்தவர். பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 5.25 கிலோ மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.அவர் யாரிடமிருந்து வாங்கி வந்தார்? இங்குயாரிடம் கொடுக்க இருந்தார்? உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..