காவலர்களின் மன அழுத்தத்தை போக்க மகிழ்ச்சி திட்டம். டி.ஜி.பி. இன்று தொடங்கி வைத்தார்.

கோவை மே 24 காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் கவுன்சிலிங் வழங்கவும் மகிழ்ச்சி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது அதன்படி கோவைமாநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி என்ற திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க பட்டது..இதைத் தொடங்கி வைக்க.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில் குமார், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உட்பட போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் உள்ள விருந்தினர் மாளிகையில் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .பிறகு மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் சட்டம் -ஒழுங்கு எப்படி உள்ளது? நிலுவையில் உள்ள வழக்குகள் எவ்வளவு? குற்றங்களை குறைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன? என்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார் .இந்தக் கூட்டத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில் குமார், போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் மற்றும் நீலகிரி, திருப்பூர் ,ஈரோடு, நாமக்கல், , தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்..இன்று (சனி) காலையில்மகிழ்ச்சி என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.