இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, கோவை மாவட்டத்திலிருந்து 300 நபர்கள் பயணம் செய்கிறார்கள்.இந்த ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உடல் பரிசோதனை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.

தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில், தடுப்பூசி முகாம் மற்றும் உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதில் ஹஜ் பயணம் செய்பவர்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.









