கோவையில் நாளை 82 மையங்களில் குரூப் – 2 தேர்வு..!

கோவை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் படி டி.என். பி .எஸ் . சி. சார்பில் குரூப் 2 மற்றும் 2 ஏ பணியிடங்களுக்கான அறிவிப்பாணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சார்பதிவாளர், உதவி ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், மற்றும் உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கான இந்த தேர்வு எழுத மாநில முழுவதும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர் . தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இந்த தேர்வு எழுத கோவை மாவட்டத்தில் இருந்து 23, 650 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து தேர்வை கண்காணிக்க டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 5 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு தேர்வு மையத்திற்கு ஒரு அலுவலர் வீதம் 82 ஆய்வு ஆய்வாளர்கள், 8 பறக்கும் பணியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் , குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் காந்திபுரம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உள்ளிட்ட இடங்களில் இருந்து தேர்வு மையங்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.