பாலியல் தொந்தரவு தரும் அரசு பள்ளி ஆசிரியர்கள்… மாணவிகள் வெளியிட்ட பரபரப்பு வீடியோ… சீக்ரெட் விசாரணை செய்யும் போலீசார்.!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11.ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிக்கு கோவை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவக்குமார், பேரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்டமாக பெண் போலீசார் அந்த பள்ளிக்கு சென்று 9-ம் வகுப்பு 10-ம் வகுப்பு மாணவிகளிடம் விசாரித்தனர். அவர்களிடம் மாணவிகள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இதனால் 11 ,12 – ம் வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது அந்த பள்ளியின் முன்பக்க கதவு பூட்டப்பட்டது .பள்ளிக்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது இது பற்றி புகார்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. மாணவிகளுக்கு “குட் டச் ” “பேட் டச் ” குறித்து ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். வழக்கமாக அரசு பள்ளி மாலை 4 மணிக்கு விடப்படும் .ஆனால் நேற்று விசாரணை காரமாக 4 – 30 மணி வரை பள்ளியில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. அதன் பிறகு மாணவ – மாணவிகள் வெளியே வந்தனர் . இதற்கிடையே பள்ளி வளாகத்தில் போலீசார் இருந்ததால் மாணவிகளை அழைத்து செல்ல வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மாலை 6 மணிக்கு மாணவ – மாணவிகளிடம் விசாரணை நிறைவு பெற்றது .

இது குறித்து போலீசார் கூறுகையில் வீடியோவில் 3 மாணவிகள் உள்ளனர். அதில் ஒருவர் ஏற்கனவே பள்ளியில் படித்து வெளியே சென்று விட்டார். மற்றும் அதே பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளிடம் விசாரணை நடத்திய பிறகு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர் . அரசு பள்ளியில் போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..