கோவை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மினி பஸ் சேவையை அரசு மீண்டும் கொண்டுவரவுள்ளது.
கோவை மாவட்டத்தில் இதுவரை பேருந்துகள் இயங்காத வழித்தடங்களை கண்டறிந்து அங்கு மினி பஸ்களை இயக்க அரசு திட்டமிட்டு அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 67 புது வழித்தடங்களில் மினி பஸ் சேவைகள் வரும் ஜூன் 15 ம் தேதி முதல் துவங்க ஆரம்பிக்கும் என புதிதாக வெளிவந்த அரசினானையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த மினி பஸ்கள் பயணத்தை மேற்கொள்ளும். அதில் 17 கிலோ மீட்டர்கள் இதுவரை பேருந்துகள் இயங்காத வழித்தடங்களாக இருக்கும்.
முதல் 4 கிலோமீட்டருக்கு பயண கட்டணம் ரூ.4 ஆக இருக்கும். 4-6 கிலோமீட்டருக்கு ரூ.5; 6-8 கிலோமீட்டருக்கு ரூ.6; 8-10 கிலோமீட்டருக்கு ரூ.7, 10-12 கிலோமீட்டருக்கு ரூ.9 கட்டணமாக இருக்கும். இதில் அதிகபட்சமான கட்டணமே ரூ.10-11 ஆக இருக்கும்.