தற்பொழுது போன் பே அதன் யூசர்களுக்காகப் புதுவிதமான ‘ஹோம் இன்சூரன்ஸ் ப்ராடக்ட்’ அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் தீ விபத்து, பூகம்பம், வெள்ளம், திருட்டுக் கலவரங்கள் உள்பட 20க்கும் மேற்பட்ட அபாயங்களை எதிராக வீடுகள் மற்றும் அதில் உள்ள பொருள்களுக்கு காப்பீடு வழங்குகிறது. இதற்கான பிரீமியம் வருடத்திற்கு ரூ. 181 + ஜிஎஸ்டி. மேலும் இதன்மூலம் 10 லட்சத்திலிருந்து, 12.5 கோடி வரை காப்பீடு தொகை வழங்கப்படும்.
ஏற்கனவே ஹோம் லோன் பெற்றிருக்கிறீர்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அனைத்து விதமான வீட்டு உரிமையாளர்களுக்கும் இந்த இன்சூரன்ஸ் வழங்கப்படும். வீட்டுக் கடனுக்கான தேவைகளை வகுத்துள்ள அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் இந்த பாலிசிகள் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் இந்த பாலிசி டிஜிட்டல் முறையில் வழங்கப்படுவதால், எந்த விதமான ஆவணங்களும் தேவையில்லை.
பிரீமியம் தொகை ஆண்டுக்கு 181 ரூபாயிலிருந்து தொடங்குகிறது
காப்பீடு தொகை 10 லட்சம் முதல் 12.5 கோடி வரை வழங்கப்படும்
இயற்கை சீற்றங்கள் மற்றும் திருட்டு உள்பட 20 மேற்பட்ட அபாயங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது
இந்த ஹோம் இன்சூரன்ஸ் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கம் என போன் பே CEO தெரிவித்துள்ளார்.