மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை … ஒரு பவுன் ரூ.44,000 தொட்டது… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்.!!

கடந்த மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

தங்கம் விலை நேற்று முன் தினம் சவரனுக்கு ரூ.24 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயர்ந்து ஒரு கிராம் 5,500 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,000 ஆகவும் விற்பனையாகிறது.

18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ஒரு கிராம் 4,505 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ஒரு சவரன் ரூ.35,040 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை மட்டும் அதிரடியாக கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.