ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்… ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை தாண்டியது..!!

ங்கம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்த உலோகங்கள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவருகின்றன.

தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 860-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 880-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை மீண்டும் பதிவு செய்து இருந்தது.

இந்நிலையில் இன்றும் (வெள்ளிக் கிழமை) தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,200-க்கும், சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,600-க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை உயர்வு நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில் வெள்ளிவிலை இன்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.203-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.