தமிழகத்தில் வரும் அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் சார்பில், தீபாவளியை ஒட்டி தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 18 மற்றும் 19 தேதிகள் முறையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாக வருவதால், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாள் நீண்ட விடுமுறை கிடைக்கிறது. இதனுடன் தீபாவளி நாளான 20ஆம் தேதியும் சேரும் போது, நான்கு நாள் விடுமுறை கிடைக்கிறது.
அதே நேரத்தில், தீபாவளிக்குப் பிறந்த நாளான அக்டோபர் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமையும் விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப வசதியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு கடந்த ஆண்டுகளிலும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கியதை நினைவுபடுத்தி, இந்த ஆண்டும் அதே போல் அக்டோபர் 21ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து, அக்டோபர் 22ம் தேதியை ஈடு செய்யும் நாளாக அறிவிக்க வேண்டும் என தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.