கோவையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ,பாரத் சேனா, அனுமன் சேனாஉள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் பொதுக்கூட்டம் ஆர். எஸ். புரம். தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமல விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம், ஞானகுரு,,பஞ்ச லிங்கேஸ்வர சுவாமிகள்; பாஜக மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர், இந்து முன்னணி நிர்வாகிகள் கிஷோர் குமார், தசரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர் . ஊர்வலம் தெப்பக்குளம் மைதானத்தில் தொடங்கி பூ மார்க்கெட், சுக்கிரார்பேட்டை காந்தி பார்க், தடாகம் ரோடு வழியாக முத்தண்ணன் குளத்தை சென்று அடைந்தது. ஊர்வலத்தில் ஜமாப் போன்ற பல்வேறு இசைக்கருவிகள் வாசித்தபடி பொது மக்கள் ஆடல், பாடல்களுடன் நடந்து வந்தனர் மேலும் பல அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர், காளி சிலைகளும் இடம் பெற்றிருந்தது. இந்து மக்கள் கட்சி சார்பில் ராஜ வீதியில் உள்ள தேர் நிலைத்திடலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது..இதைஅதன் தலைவர் அர்ஜுன் சம்பத் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார் ஊர்வலம் தேர் நிலைத்திடலில் தொடங்கிமுத்தண்ணன் குளத்தை சென்றடைந்தது அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன் வாகனத்தில் இருந்து இந்துஅமைப்பினர் விநாயகர் சிலைகளை தூக்கி வந்து வழிபட்டனர் பலர் விநாயகர் சிலைகள் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலைகள் கரைக்கப்படுவதை முன்னிட்டு முத்தண்ணன் குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சிலைகளை பொதுமக்கள் இந்து அமைப்புகள் நேரடியாக குளத்தில் கரைக்க அனுமதிக்கப்படவில்லை. கோவை தீயணைப்பு படை வீரர்கள், தன்னார்வலர்கள் சிலைகள் கரைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விநாயகர் சிலைகளை குளத்தில் கரைப்பதை பார்க்க ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் குளக்கரையில் அமர்ந்தபடி சிலை கரைப்பதை கண்டு ரசித்தனர் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர்தலைமையில் 2 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் ,தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார் அதிரடிப்படை,அதி விரைவுப்படை போலீசார் வெள்ளலூர் துணை ராணுவப்படையினர் ( சி ஆர்.பி.எப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் சிலைகள் கொண்டுவரப்பட்டு ஒவ்வொரு வாகனத்திலும் போலீசார் பாதுகாப்புக்காக உடன் வந்தனர்.நேற்று கோவை மாநகரில் மொத்தம் 260 சிலைகள் கரைக்கப்பட்டன .சிலை ஊர்வலத்தை ஒட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது..
முத்தண்ணன் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு..!
