விநாயகர் சிலை ஊர்வலம்… கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்.!!

கோவை : விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர பகுதியில் 722 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது .இதில் கடந்த 27ஆம் தேதி 20 சிலைகளும் நேற்று 418 சிலைகளும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.இ தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீதமுள்ள 284 சிலைகளும் கரைக்கப்படுகிறது.இதை ஒட்டி நாளை மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.