கோவை காந்தி பார்க் சுக்ரவார்பேட்டையில் அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது..இந்த கோவிலில் உண்டியல் பணம் எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் பரமசிவன் தலைமையில் நேற்று நடந்தது. கவுன்சிலரும்,நகர அமைப்பு குழு தலைவருமான சந்தோஷ் என்ற சோமுஇந்தப் பணியை தொடங்கி வைத்தார். இதில் கோவில் ஊழியர்கள் பக்தர்கள் உள்பட45 பேர் ஈடுபட்டனர். எண்ணும் நேற்று மதியம் முடிவடைந்தது. மொத்தம் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம் பணமும், ஒன்றரை கிராம் தங்கமும், 395 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியம், ஆய்வாளர் ராம் குமார், அறங்காவலர்கள் மகேஸ்வரன், ராஜா, விஜயலட்சுமி, கணக்காளர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காந்தி பார்க் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.5 லட்சத்து 2 ஆயிரம் உண்டியல் வசூல்..!
