பணம் வைத்து சூதாட்டம் : 13 பேர் கைது.

கோவை மே 12

கோவை மாவட்டம் கோமங்கலம் பக்கம் உள்ள மாமரத்துப்பட்டியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கோமங்கலம் போலீசருக்கு நேற்று மாலை தகவல் வந்தது .சிறப்புசப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து அங்கு திடீர் சோதனை நடத்தினார் அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதை ஊரைச் சேர்ந்த மணிகண்டன் ( 47 ) விஜய் ( 25 ) விக்னேஷ் (33) சதீஷ்குமார் (45) குமார் (40) தர்மலிங்கம் ( 40 ) புத்தன் (49) சுப்பிரமணி (70) சுப்பிரமணி (55 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூபாய் 15,270 பறிமுதல் செய்யப்பட்டது .இதே போல கோட்டூர் பக்கம் உள்ள ஆர் எம் புதூர்  சர்ச் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சோமந்துறையைச் சேர்ந்த பழனிச்சாமி ( வயது49 )உட்பட 4 பேர்கைது செய்யப்பட்டனர். 3 சேவல்களும் இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது,