கோவை கடைவீதி காவல் நிலையத்தில் மாடியில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் அறையில் பேரூர் ராமசெட்டிபாளையம்,காமராஜர் நகரை சேர்ந்த அறிவொளிராஜன் ( வயது 60) என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் துணை கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த போது பணியில் இருந்தது யார்? எங்கு கவனக்குறைவு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையில் போலீசாரின் கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது தெரிய வந்தது இதைத் தொடர்ந்து அந்த போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் போலீஸ்காரர் செந்தில் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டனர்.இது தொடர்பாக மnஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டது.இந்த நிலையில் போலீஸ் நிலையங்களில் உள்புற பணியில் இரவு நேரத்தில் 2 போலீசார் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இனி இரவு நேரத்தில் போலீஸ் நிலையங்களில் 2 போலீசார் கட்டாயம் – கோவை மாநகர காவல் ஆணையர் அதிரடி உத்தரவு.!!







