அரசு பஸ்சில் அனைத்து முதியவர்களுக்கும் இலவசமாக பயணம்

கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 23-ந் தேதி 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகர பஸ்களில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் . ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து இலவசமாக பயணம் செய்யலாம் அன்று காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்க இவர்களை அழைத்துச் செல்லும் அனைத்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .