ரேஷன் கார்டு வைத்திருபவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறுவதற்கு புதிய எளிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைகளிலேயே நேரடியாக ஆயுஷ்மான் கார்டை விண்ணப்பித்து பெற முடியும். இதனால் பொதுமக்களுக்கு அலுவலகங்களுக்கு செல்வதற்கான சிரமம் குறைந்து, நேரமும் மிச்சமாகிறது.

இந்த காப்பீட்டு திட்டம் மூலம் அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும். ரேஷன் கடையில் விண்ணப்பிக்கும்போது, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவை அவசியம் கொண்டு செல்ல வேண்டும். அங்கு பணிபுரியும் விற்பனையாளர் உங்கள் விவரங்களை சரிபார்த்து, தகுதி இருப்பின் e-KYC செயல்முறையை முடித்து கார்டை உருவாக்குவார்.

மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (beneficiary.nha.gov.in) சென்று மொபைல் எண்ணின் மூலம் OTP கொண்டு லாகின் செய்யலாம். அதன் பிறகு ஆதார் அல்லது ரேஷன் கார்டு எண்ணை பயன்படுத்தி தங்களது பெயரை சரிபார்க்கலாம். பட்டியலில் பெயர் இருந்தால், OTP அல்லது பயோமெட்ரிக் மூலம் e-KYC முடித்தவுடன், சில நிமிடங்களிலேயே ஆயுஷ்மான் கார்டை டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுக்க முடியும்.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், வயது வரம்பு எதுவும் இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இந்த காப்பீடு கிடைக்கும். இதனால் மருத்துவ செலவுகளுக்கான கவலை குறையும்.