சாமி கும்பிடும் போது விளக்கு தீயில் சேலை பட்டு மாஜி தலைமையாசிரியை பலி..

கோவை : தூத்துக்குடி யில் உள்ளமேலூரை சேர்ந்தவர் சொக்கநாதன் .இவரது மனைவி சிவகாமி (வயது 75 )இவர் கோவை கணபதி மணியக்காரம் பாளையத்தில் வசித்து வந்தார் .தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த 2-ந்தேதிஆயுத பூஜை தினத்தில் பூஜை அறையில் சாமி கும்பிடும் போது விளக்கு தீ இவரது சேலையில் தவறுதலாகப்பட்டு தீப்பிடித்தது.இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு இறந்தார் .இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.