கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நாளை நடக்கிறது . இதில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம். முன்னதாக அன்றைய தினம் காலை 9 மணிக்கு வேளாண்மை உற்பத்தி குழு கூட்டம் நடக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்.!








