கோவை கவுண்டம்பாளையம், அவுசிங் யூனிட், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜசேகர் ( வயது 41) தச்சு தொழிலாளி .இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி நிவேதா என்பருடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாராம். இதை மணிகண்டன் கண்டித்தார். இதனால் ஏற்பட்ட தகராறு மணிகண்டனும், அவரது மாமியார் திலகாவும் சேர்ந்து ராஜசேகரை ஹெல்மெட்டாலும், கல்லாலும் தாக்கினார்கள் . இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்கு பதிவு செய்துமணிகண்டன், அவரது மாமியார் திலகா ஆகியோரை தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதல் விவகாரம்… தொழிலாளி மண்டை உடைப்பு – மருமகன், மாமியாருக்கு வலைவீச்சு.!!







