அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு இபிஎஸ் மரியாதை..!

ம்பேத்கரின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

தமிழ் நாட்காட்டியில் சித்திரை மாதம் 1ம் தேதியான இன்று (ஏப்ரல் 14) தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அதுபோல, சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 132வது பிறந்தநாள், அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பல அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம் .

அந்த வகையில், அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளையொட்டி சேலத்தின் மாநகராட்சி தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.