கோவை கவுண்டம்பாளையம் பி. அண்ட்.டி . காலணியில் பண்ணாரி அம்மன் மணல் சப்ளையர்ஸ் நிறுவனம் உள்ளது. இங்கு திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலை சேர்ந்த ரமேஷ் (வயது 30) என்பவர் 2023 ஆம் ஆண்டு முதல் 20 25- ஆம் ஆண்டு வரை ஊழியராக வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனத்தில் வருடாந்திர கணக்கு தணிக்கை செய்த போது ரூ 12 லட்சம் கையாடல நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளர் வெங்கடாசலம் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரில் தங்கள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த ரமேஷ் ரூ. 12 லட்சம் கையாடல் செய்துள்ளதாக கூறியுள்ளார் .இது தொடர்பாக போலீசார் ரமேஷ் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
தனியார் நிறுவனத்தில் ரூ.12 லட்சம் கையாடல் – ஊழியர் தலைமறைவு.!!
