ஐஸ்கிரீம் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து – ஊழியர் கைது..!

கோவை ராமநாதபுரம், சுங்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் சாம்சன் கிஷோர் (வயது 26) ஐஸ்கிரீம் கடை டத்தி வருகிறார். இவரது கடையில் மதுரையை சேர்ந்த விஷால் குமார் ( வயது 20) என்பவர் வேலை செய்து வந்தார். அவர் ஐஸ்கிரீம் விற்ற தொகையை கொடுக்காமல் மோசடி செய்தார். இது பற்றி கேட்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த விஷால் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சாம்சன் கிஷோரை குத்தினார்.இதில் இவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விஷால் குமாரை கைது செய்தனர் இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.