நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகம் பிடித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் செயல்முறை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு நடத்தும் பணி இன்று நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும்,மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன் குமார் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தில், அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.







